பிறையொன்றினால் சடை அணிந்த தேவா !
வாடை மலர் மொத்தமும் உனக்குத் தருவேன்!
அதை ஏற்றுக்கொள்ளவும் விழைகிறேன்!
ஆரமுனக்கு மலரினால் சூடலாகுமோ!
வாடா மலர்மொழி கொண்டு வாழ்த்தியே பாமாலை சூட்டுவேன்!
மனமொன்றியே என் இதய கமலம் விரிந்தவிழ!
தெளிந்த ஓடையில் தெள்ளு தமிழ் நீராட்டி அன்னையைப் போல் சீராட்டி மகிழ்வேன்! என்னையும் இங்கே ஒரு ஆளாக்கினாய் எம்பெருமானே! நான் பெற்ற நாவண்மை நீதந்த அருளாசி சிவமெனும் செம்பொருளே!
@ சிவ அறிவழகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக