செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சிவ சிவ என்பர் யார்?

சிவ சிவ என்பர் யார்?
 சிவனடியார்கள்!
யோகிகள் தவசிகள்!
உழைத்துக் களைத்தோர்!
மரஞ்செடி கொடிகள்
புல்லும் பூண்டும்!
மனிதரானவர் அத்துனை பேரும் !
வாசியின் போக்கும் வரவும் நாசியில் நடக்கையில் தன்னையறியாமல் சொல்கிறோம் சிவ சிவ!!!
வெளியே செல்கையில் சிகாரம் 'சி'
உள்ளே நடக்கையில் வகாரம் 'வ'
மூச்சு வேண்டுவோர் சொல்வது சிவ!!
சிவ!!
சிவ சிவ எனச் சொல்லார் யாவரும் மூச்சற்றவரே!
சிவனே என்றிருப்போரை யாரும் துன்பறுத்துவதில்லை!
சிவ சிவ என்பர் யாரும் துன்புறுவதுமில்லை!

@சிவஞான அறிவழகன்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக