செவ்வாய், 17 செப்டம்பர், 2019

நட்புக்காக

புன்னகை பூத்தபடி  !  கண்ணைக் கவரும் காந்த விழிகள்!
விழிகள் கூர்மையானதொரு பார்வை!
சரியோ தவறோ  உதிர்த்திடும் உதடுகள் உயர்ந்து!
நல்லனவற்றுக்கு தரும் ஊக்கம்! உந்தன் பங்களிப்பு! குழுவோடு கூட்டிச் செல்வாய் எங்களையும் !  பிரயாணம் குதூகலமாக ! பிரபு உன்னைக் காணாத பொழுதுகள்! நிறைவில்லா ஞானோதய நினைவுகள் ! நிசத்தின் சாயலை  இன்று முதல் காணப்போகிறோம்!  இதுவரை அனைவரும் ஒரு குடையின் நிழலில்!
இனியவரவர் இயல்பில்  பயணிக்க இயன்றிடும்!  *ஓம் ஸ்ரீ ஜெய் குருவின்'* விழுதுகள் நாம்! உருவில் குறையில்லை உண்டாக்குவோம் நமக்கொரு பாதையை! பிரச்சினைகள் நம்மிடம்! தீர்வுகள் அவனிடம்! சரணம் குருவே !  சரணம் குருவே!  குருச் சரண் பாடல்கள் எப்பொழுதும் ரீங்காரமாய் அல்ல ஓம்காரமாய் ஒலித்திட!
வாழ்த்துக்கள் வழிவிடுத்து மருமுறை வருவாய் என! வசந்தமாய் வீற்றிருந்தாய் எங்கள் நெஞ்சத் தாமரையில்! இன்றும் என்றும் என்றென்றும் ஆனாலும் கனக்கிறது இதயம்!  தூரிகை தொடுத்த போது துளிர்த்தன வரிகள் கண்கள் குளமாக்கியபடி! நன்றி குருஜி!

ஆளப்பிறந்த மகராசா !

ஆளப்பிறந்த மகராசா !
மனுநீதி சோழனல்ல உன்தந்தை ! ஆளும் நாட்டை தரப்போவதில்லை உனக்காக!
பிள்ளைச்செல்வம் நீ பிறந்தாய் ! எங்கள் செயல் வினை தீர
இங்கே  வந்தாய்!
ஒழுக்க நெறி நீயதனை கற்று வளர்வாய்! அன்னை தந்தை மெச்ச நீயும்  வலம் வருவாய்!
தந்தை உன் தோழன்தான்!  அம்மா  அன்பின் வார்பு தான்!
நீயும் வரம் பெற்றே இங்கு பிறந்தாய்!   தவம் செய்தே உன்னைப் பெற்றோம்! தவப் புதல்வன்  நீதானய்யா!
எங்கள் தவத்தை நிறைவு செய்வாய்! வாழ்க! வளர்க!
கலையாத கல்வியும் குன்றாத வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வாய் !
குருவின் திருவருள் சிவத்தின் பலத்துடன் வாழ வாழ்த்துக்கள்!👑👑👑👑👑🍇🍇🍇

திருப்பெருந்துறை எம்மான்

திருப்பெருந்துறை எம்மானே  !
தேமென  திரிந்தேன்!
உண்டு ஊண் கழித்தேன்
உமைப் போற்றிப் பாட அறிகிலேன்!
வீணென பொழுதைக் போக்கினேன்!
புகழ்க்கேங்கினேன் வாதவூரானே!
உன் பதமலரை தொழுதிலேன்!
உன்னடியாரோடு கூடவல்லேனல்லன்!
மதி கெட்டலைந்தேன் !
சிறு பூசை செய்திலேன் உமக்கு!
நெற்றியிலே நீறுதாங்க நினைக்கிலேன்!
மன்னிக்க வேண்டும்  எனதிறையோனே!
உன்திருநடனம் மகிழக் காணக் கூடுமா எந்தாய்!

சிவ அறிவழகன்

மாலை ஒளி வெள்ளத்திலே

மாலை ஒளி வெள்ளத்திலே மனமகிழ
வந்தவளே!
பள்ளி கொண்ட பாற்கடலோன் பெருமான் தன் சோதரியே!

நிலவினைப் போல் குளிர்ச்சி தரும் உன் கருணையான பார்வையம்மா !

அன்னையே சிவ சக்தியானவளே சிங்கையின் தாயம்மா காக்கும் குணமானவளே!  
அரனின் இடமாயமர்ந்தவளே!

ஸ்ரீ சிவ துர்க்கையம்மா
காக்கும் அரணாவளே !
வெள்ளித் தேரில் பவனி வரும் தங்கத்தீவின் தங்கமமம்மா சக்திவடிவான ஸ்ரீகாளியம்மா!

திருக்கடவூரின் நாயகியே அபிராமித் தாயம்மா !
சிக்கலிலே பள்ளிகொண்ட சிங்கார காளியம்மா!
உன்னலங்கார வடிவுகண்டு வசியமாகினோமம்மா!

சிவ@ அறிவழகன்

தென்னகத்து ஊரில்

தென்னகத்து ஊரில் வாழும்
மண்ணகத்தின் மானிடரே!    பிழைப்பில் விருப்பம் கொண்டால் உயிர்ப்பில் குறையில்லை!! !உறவுகளைப் பேணுவதில் குறையுமுண்டு நிறையுமுண்டு!
உயிர்களிடம் அன்புகொள்ள உனக்கெந்த குறையுமில்லை! சிவனிடம் அன்பு கொள்வீர்!
சிவநேயச் செல்வர்களே சிவாயநம சொல்லுங்களேன்! உமையவளும் உடன் வருவாள்!
பரமனும் பார்த்தருள்வான்!
       
  சிவ@ அறிவழகன்

கருணை வடிவானவளே!

கருணை வடிவானவளே! கைவளை கலகலக்க அசைந்தாடும் சின்னவளே! பச்சைப் பட்டாடையில் அழகானவளே!
சின்ன இடையில் நடைநடக்கும் அன்னமே!கிளையில் அமரும் கிளியை அணிந்தவளே!
மஞ்சளை பூசிக்கொண்டு மங்கலம் தருவாயே! குங்குமம் அணிந்து கொண்டு மாங்கல்யம் காப்பாயே!
உன் ஒத்தைக் கல்லு
மூக்குத்தியில் ஒளிதருவாய் இந்தபூமிக்கு!
அம்மா அம்மா என குரல்விடுக்கும் பக்தனுக்கு செவிமடுப்பாயா!
மந்திரம்  என்ன சொல்லம்மா உந்தன் அடிபணிந்தேன்!
எந்த தந்திரமும் பலிக்கவில்லை நீ இருக்கும் போது  எந்த கவலை இல்லை! எமபயமுமில்லை !

@ சிவ அறிவழகன்

கைகாட்டு சுந்தரியே

கைகாட்டு சுந்தரியே உந்தன் ஒருகரம் நீட்டு!
அந்த ஆசியில் தீராத குறைகளுமுண்டோ!
இதை இல்லை  என்று மறுப்பார் இந்த அகிலத்திலுண்டோ! சொல்வண்மை தந்துவிட்டு அதை சொல்லாதே என்று சொன்னால் நான் என்ன செய்ய !
எங்கள் பாவங்களை குறைவாக்கு இதுவே உன் திருவாக்கு!
எங்கள் வேண்டுதலை நீ  அந்த ஈசனிடம் பரிந்துரைத்து ! நேசமுடன் நிறைவேற்று!

@ சிவ அறிவழகன்