திங்கள், 21 நவம்பர், 2011

செப்பனிடு

kavi

Show Details

Message body

          
என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !

கல்லான பாதையை நான் கந்தா என்றே
நான் கடந்திடுவேன் !

முள்ளான பாதையை நான் முருகா
என்றே முந்தி செல்வேன் !

புதைகுழி வந்துவிட்டால் கடம்பா
நான் என்ன செய்வேன் !
கடம்பா நான் என்ன செய்வேன் !

முகத்திரண்டு விழியிருந்தும் ஐயா
உனைக் காண வழியில்லையே !

கண்ணொளியை நீ தாராய் !
விழி மலரை உணரவைப்பாய் முருகா!

என் வாழ்க்கை பாதையை நீ
செப்பனிட மாட்டாயா !

சண்முகா! சண்முகா ! சண்முகா !
சரணம் ! சரணம் ! சரணம்!

                                           அறித்யா அறிவழகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக