வியாழன், 10 நவம்பர், 2011

சரவண பவ


போற்றுவேன் உனை மலர்க் கொண்டு!
பாடுவேன் உனை பண்ணோடு !
முருகா! முருகா ! முருகா!

விதி வழி மாட்டிக் கொண்டேன் இறைவா!
உன் விழி வழியால் எனைத் தேற்றுவாய் !
குமரா! குமரா !குமரா!

பொன்னுரு மேனியனே வண்ணமலர்க் கண்ணினே !
காத்திடுவாய் அண்ணலே போக்கிடுவாய் இன்னலே!
முருகா!முருகா!முருகா!

தில்லையிலே ஆடுகின்ற அம்பலத்தான் தன்மகனே
பொற்றேரில்  பவனி வரும் பழனி வடிவேலா!
சண்முகா!சண்முகா!சண்முகா!

சரணம் !சரணம் !சரணம் !
சரவண பவ ஓம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக