செந்தூர் முருகனைப் பாடாமல் மனமே
என் வசம் திரும்பாதே !
செவ்வேல் அழகைப் போற்றாமல்
என் வாழ்வில் வசந்தம் மலராதே !
கூப்பிட்ட குரலோசை கேட்டோடி வருவானே கந்தன்
சிரம் தாழ்த்தி கும்பிட்ட பேர்க்கெல்லாம்
பயம் போக்கி தெளிவிப்பான் என் அப்பன் !
பாதநடைப் பிரியன் அவன் தலம் நோக்கி
நடக்கயிலே நம்மோடு வருவானே ஐயன்!
செந்தாழம் பூவில் வாசம் சுகந்தம் என்றால்
அருணகிரி திருப்புகழ் வசந்த சுகந்தம் என்பேன் !
குன்னக்குடி நாயகன் குழந்தை வடிவேலவன்
சந்தம் சொல்லி பாடுவோம்
வெள்ளி முளைக்கும் வேளையிலே
வெண்கல மணியோசை கேட்கையிலே
வீணை நரம்புகள் போல் சிலிர்த்தெழுமே
மனம் கதிரேசன் மலர்ப்பதம் நாடிடுமே !
சக்தி உமை பாலகனே வெற்றி வடிவேலனே
சூரனை சமர் செய்த சம்கார மூர்த்தியே !
சக்தி கொடு எனக்கு இல்லையேல் முக்தி கொடு!
அறித்யா அறிவழகன்
என் வசம் திரும்பாதே !
செவ்வேல் அழகைப் போற்றாமல்
என் வாழ்வில் வசந்தம் மலராதே !
கூப்பிட்ட குரலோசை கேட்டோடி வருவானே கந்தன்
சிரம் தாழ்த்தி கும்பிட்ட பேர்க்கெல்லாம்
பயம் போக்கி தெளிவிப்பான் என் அப்பன் !
பாதநடைப் பிரியன் அவன் தலம் நோக்கி
நடக்கயிலே நம்மோடு வருவானே ஐயன்!
செந்தாழம் பூவில் வாசம் சுகந்தம் என்றால்
அருணகிரி திருப்புகழ் வசந்த சுகந்தம் என்பேன் !
குன்னக்குடி நாயகன் குழந்தை வடிவேலவன்
சந்தம் சொல்லி பாடுவோம்
வெள்ளி முளைக்கும் வேளையிலே
வெண்கல மணியோசை கேட்கையிலே
வீணை நரம்புகள் போல் சிலிர்த்தெழுமே
மனம் கதிரேசன் மலர்ப்பதம் நாடிடுமே !
சக்தி உமை பாலகனே வெற்றி வடிவேலனே
சூரனை சமர் செய்த சம்கார மூர்த்தியே !
சக்தி கொடு எனக்கு இல்லையேல் முக்தி கொடு!
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக