Message body
முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ!
உன் புகழைப் பாடுகிறேன் !
உன்னடியை நாடுகிறேன் !
ஆ... ஆ.. ஆ ..ஆ.. ஆ. .
கந்தன் கைத் திருநீறு
காக்கும் என்னைப் பலவாறு !
விண்ணுலகம் போற்றும் தலைவா !
மண்ணுலகம் காக்கும் முருகா!
மானிடராய் இருக்கும் போதே
உன் பதமே சரணடைந்தேன்!
முன்னம் செய்த தவப்பயனோ
முன்னோர் செய்த வினைப்பயனோ
அறித்யா அறிவழகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக