சிந்துகின்ற தேனருவி
சந்தம் சொல்லி பாடி விடும் !
கந்தன் உன்னை பாட மட்டும்
காற்றலைகள் அனுமதிக்கும் !
காற்றலைகள் அனுமதிக்கும் !
பேசுகின்ற சங்கொலிகள்
சங்கநாதம் இசைத்துவிடும் !
முத்தமிழ் முதல்வன் உன்னை
எந்நேரம் முழங்க மட்டும்
கடலலை அனுமதிக்கும் !
கடலலை அனுமதிக்கும் !
ஆற்றங்கரை கயல்கள் எல்லாம்
அரோகரா பாடியன்றோ
துள்ளி ஆடி விடும் !
அண்ணலே உன்நினைவில் ஆடமட்டும்
நதி நீர் அனுமதிக்கும் !
நதி நீர் அனுமதிக்கும் !
வீசுகின்ற மென்தென்றல்
ஓம் ஓம் என்றபடி கவரி வீசும் !
நாணல் கீற்று அதற்கேற்ப அசைவுதரும்!
அசைவுகள் மாறிவிட்டால்
புயலாய் எதிரொலிக்கும் !
புயலாய் எதிரொலிக்கும் !
மார்கழி மாசத்திலே பூக்கின்ற
பூக்கள் எல்லாம் உந்தனுக்காய் மலர்ந்துவிடும்!
கோர்க்கப்பட்ட மாலை எல்லாம்
வேலர் உம்மை அலங்கரிக்கும் !
வேலர் உம்மை அலங்கரிக்கும் !
என்னுடல் ஆர்ப்பரிக்கும் !
ஞானத்தின் ஒளிவடிவே அழகா குமரா !
கொட்டும் ஒளிக் கதிரிலெல்லாம்
பிரணவ மந்திரமே வரிவடிவாய் விழுகுதய்யா !
ஆதலால் பொழுதும் புலர்ந்தய்யா !
பொழுதும் புலர்ந்தய்யா !
அறித்யா அறிவழகன்
சந்தம் சொல்லி பாடி விடும் !
கந்தன் உன்னை பாட மட்டும்
காற்றலைகள் அனுமதிக்கும் !
காற்றலைகள் அனுமதிக்கும் !
பேசுகின்ற சங்கொலிகள்
சங்கநாதம் இசைத்துவிடும் !
முத்தமிழ் முதல்வன் உன்னை
எந்நேரம் முழங்க மட்டும்
கடலலை அனுமதிக்கும் !
கடலலை அனுமதிக்கும் !
ஆற்றங்கரை கயல்கள் எல்லாம்
அரோகரா பாடியன்றோ
துள்ளி ஆடி விடும் !
அண்ணலே உன்நினைவில் ஆடமட்டும்
நதி நீர் அனுமதிக்கும் !
நதி நீர் அனுமதிக்கும் !
வீசுகின்ற மென்தென்றல்
ஓம் ஓம் என்றபடி கவரி வீசும் !
நாணல் கீற்று அதற்கேற்ப அசைவுதரும்!
அசைவுகள் மாறிவிட்டால்
புயலாய் எதிரொலிக்கும் !
புயலாய் எதிரொலிக்கும் !
மார்கழி மாசத்திலே பூக்கின்ற
பூக்கள் எல்லாம் உந்தனுக்காய் மலர்ந்துவிடும்!
கோர்க்கப்பட்ட மாலை எல்லாம்
வேலர் உம்மை அலங்கரிக்கும் !
வேலர் உம்மை அலங்கரிக்கும் !
என்னுடல் ஆர்ப்பரிக்கும் !
ஞானத்தின் ஒளிவடிவே அழகா குமரா !
கொட்டும் ஒளிக் கதிரிலெல்லாம்
பிரணவ மந்திரமே வரிவடிவாய் விழுகுதய்யா !
ஆதலால் பொழுதும் புலர்ந்தய்யா !
பொழுதும் புலர்ந்தய்யா !
அறித்யா அறிவழகன்