வீழ்ந்து
நேற்றெனக்கு நிழல் தந்த தருவாய்
தென்றல் உலவும் சோலையாய்
குருவிகளின் குடிலாய்
நெடுந்து படர்ந்த மரம்
புள்ளினங்கள் எச்சம் போடுதாம்
பூக்கள் சருகுகள் குப்பையாம்
வாழ்ந்து வீழ்ந்த மனிதனாய்
மண்ணில் உலர்ந்த ரத்தத்துடன்
உலராத உயிருடன் மரம்
மண்ணின் வரம் !
அறித்யா அறிவழகன்