சனி, 10 நவம்பர், 2012

மலரும் பூக்கள்

மலரும் பூக்கள் எல்லாம்
மாலைகள் ஆவதில்லை
மலர்ந்த மலர்கள் உடன்
மாலையில் அமர்வதில்லை

கட்டிய மலர்ச்சரங்கள்
விழுந்தது எந்த இடம்
மனிதனின் மீது என்றால்
அவனுக்கு பெருமை
இறைவனின் தாளில் சிலைகளின் மீது
என்றால் யாருக்கு பெருமை !

உதிரும் போது தான் பூக்கள்
வீழ்வதை உணரும் !

உயரும் போதில் மனிதன்
மறப்பது ஏன்  ?


வியாழன், 26 ஜனவரி, 2012

இளைய காற்று

இதம் தேடுகையில் இளந்தென்றல் காற்று
எனை ஏதோ செய்கிறது !

எழில் காட்சி தனை விழி காணுகையில்
வானம் விந்தை அளிக்கிறது !

மேனியில் படரும் மெல்லிய காற்றில் தெள்ளிய
தேனாய் தித்திக்கிறது !

மான் விழி மங்கையின் வேல் விழி பார்வை
ஏகாந்த தன்மையை தருகிறது!

யாழினை மீட்டும் மெல்லிய விரல்கள்
பனித்துளி பட்டால் சிலிர்க்கிறதே