செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வாலைக்குமரி அம்மா

வாலைக்குமரி அம்மா !
பெண்  பூவே வாலைக்குமரியம்மா!
கன்னியாகுமரி தாயே!
கன்னிப் பெண்ணே பகவதியம்மா! ஒளிகொண்ட வைரம் உன் மூக்கில் இழைந்தாட காலை மலருதம்மா!
தினமும் கதிரொளி வீசுதம்மா!
கண் கண்ட தாயே காட்சி வேண்டுமம்மா!
உந்தன் சாட்சி சொல்ல வேண்டும் மாட்சிமை தாருமம்மா!
மண்ணிலே மகிமை பேச வேண்டும் காரணம் தெரிய வேண்டும்!
நான் பிறந்த அர்த்தம் அறியவேண்டும்! கன்னியாகுமரியம்மா !
வசமாக வேண்டும் தாயே!
வாலைக்குமரி அம்மா !

அறிவழகன்@

சிவ துதிப்பாடல்கள்